777 சார்லி படத்த பார்த்துட்டு கதறி அழுத கர்நாடக முதல்வர்.. அவரே கொடுத்த எமோஷனல் பேட்டி.! காரணம் இதுதானா.?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Shiva Shankar | Jun 15, 2022 01:24 PM

நடிகர் ரஷித் ஷெட்டி நாயகனாக நடித்திருக்கு கன்னட திரைப்படம் ‘777 சார்லி’.

karnataka cm basavaraj bommai emotional 777 charlie

அட.. 90s Kids-ன் ஃபேவ்ரைட் ஹீரோயின் சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகனா..? வைரல் புகைப்படம்.!

இந்த படத்தில் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கிரண் ராஜ் இயக்கியிருக்கும் இந்த படம் கடந்த ஜூன் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

இந்த நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த படத்தை திரையரங்குக்கு சென்று பார்த்துவிட்டு அழுது கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. செல்லப்பிராணி நாய்க்கும் அதன் வளர்ப்பாளருக்குமான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உணர்வு ததும்ப ததும்ப உருவாகியிருக்கிறது இந்த 777 சார்லி திரைப்படம். 

karnataka cm basavaraj bommai emotional 777 charlie

இந்த படத்தை பார்த்துவிட்டு அழுதபடியே வந்து செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, “இது எல்லாரும் பார்க்க வேண்டிய படம். படத்துல நாய் கண்ணாலேயே தன்னோட உணர்வுகளை கடத்தியிருக்கு. நாய்கள் சம்மந்தப்பட்ட  படங்கள் ஏற்கனவே அதிகமா வந்திருந்தாலும் இந்த படம் உணர்வு பூர்வமாக இருக்கு. நாய்களின் அன்பு எப்போதுமே நிபந்தனையில்லாதது. தூய்மையானது.” என பேசிக் கொண்டிருக்கும்போதே உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிய

இத்துடன் படம் பார்க்கும் போதும் அவர் சோகமாக இருந்த புகைப்படமும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், அதாவது  கர்நாடக முதலமைச்சராக  பதவி ஏற்பதற்கு முன்பு பசவராஜ் பொம்மை வளர்த்து வந்த செல்லப்பிராணியான Snooby என்கிற நாய் இறந்தது. அந்த சமயத்தில் அந்த இறுதிச்சடங்கில் போது ஸ்னூபியின் மீது படுத்து கதறி அழுதார் பசவராஜ். அந்த நேரத்தில்

karnataka cm basavaraj bommai emotional 777 charlie

இதனிடையே 777 சார்லி படத்தை பார்த்த மங்களூரு காவல்துறையினர், அந்த படத்தை பார்த்ததும் தாங்கள் வைத்திருக்கும் போலீஸ் மோப்ப நாய்க்கு கூட சார்லி என்று பெயரிட்ட்டுள்ளனர். இந்த படம் கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு  ஆகிய 5 மொழிகளிலும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | “குட்டிப் பாப்பா வரப்போகுது”… “என்ன சொல்றீங்க…?” – வைரலாகும் R J பாலாஜியின் Prank வீடியோ

Tags : #KARNATAKA CM #BASAVARAJ BOMMAI #777 CHARLIE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karnataka cm basavaraj bommai emotional 777 charlie | India News.