'எங்க கிட்டயேவா?'.. 'ஊழியர்களையும்' கடையையும் அடித்து உடைத்த 'போதை ஓட்டுநர்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 13, 2019 10:28 AM
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ளது கலீம் என்பவர் நடத்தி வரும் பிரியாணி கடை.
காஜா ரெஸ்டாரண்ட் என்கிற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த பிரியாணி கடையில் 2 பிரியாணி பார்சல் செய்ய வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இரண்டு பேர், பிரியாணிக்கு பணம் கொடுக்காமல் நகர முயற்சித்தபோது, ஹோட்டல் சர்வர் அஜம் தடுத்துள்ளார். ஆனால் அவர்கள் 50 ரூபாயை தூக்கி வீசிவிட்டு மீண்டும் நகர முனைந்துள்ளனர்.
அப்போது அவர்களைத் தடுத்த, கலீம் 2 பிரியாணி பார்சலுக்குண்டான 240 ரூபாய் பணத்தை எடுத்து வைத்துவிட்டு இடத்தை விட்டு நகருங்கள் என்று கூறியுள்ளார். மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இதைக் கேட்டதும் ஓங்கி கலீம் முகத்திலும் அஜம் முகத்திலும் குத்து விட்டனர். கடையையே அடித்து உடைத்துள்ளனர்.
ஓசி பிரியாணிக்காக பாக்ஸிங் செய்த ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த செயல் சிசிடிவியில் பதிவானதை அடுத்து, கலீம் அளித்த புகாரின் பேரில் கோனாமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஜெயபாரத் மற்றும் செல்வபிரபு இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.