'மோடி'யுடன் நடந்த உரையாடலுக்கு பின்!!... சும்மா மெர்சலான அறிவிப்பை வெளியிட்ட 'சுந்தர் பிச்சை'... "அடுத்த 5 வருஷத்துல 'இந்தியா'வுல பட்டைய கெளப்ப போறோம்"!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா காரணமாக நாடு முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, நாட்டின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டி கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். இதுகுறித்து, மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்திய விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோர் ஆகியோரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த தொழில்நுட்ப மேம்படுத்தல் குறித்து கலந்துரையாடினோம்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ருபாய் 75,000 கோடி கூகுள் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிர்காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த தங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த முதலீடுகள் செய்யப்படுவதாக சுந்தர் பிச்சை மேலும் கூறியுள்ளார். அதே போல சுகாதாரம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டும் இந்த முதலீடு செய்யப்பட முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் இணைய சேவைகளை இந்தியர்களுக்கு பயனுள்ளதாகும் நடவடிக்கைகளில் கூகுள் ஈடுபடும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் குரல் உள்ளீடு உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலான முதலீடு கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
