"கங்கை நதியில் கரைந்த கனவுக்காரன்!".. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் 'அஸ்தியை' கரைத்த 'குடும்பத்தினர்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், எம்.எஸ்.தோனி: தி அன் டோல்டு ஸ்டோரி.

இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான் இந்தத் திரைப்படத்தில் நடித்தவர், பாட்னாவைச் சேர்ந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். தோனியின் மேனரிசத்தை உரித்துவைத்தாற்போல், அந்த படத்தில் இவர் நடித்த பின், தோனியின் ரசிகர்களும் இவருக்கு ரசிகர்களானர்.
இவர், கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பையின் பந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதனை அடுத்து சமூக ஊடகங்களில் இவரின் தற்கொலை குறித்த பல்வேறு கருத்துக்களும், பதிவுகளும், விவாதங்களும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
இந்நிலையில், இவரது குடும்பத்தினர், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் அஸ்தியை பாட்னாவில் உள்ள கங்கை நதியில் கரைத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்
