பாக்றதுக்கு எல்லாம் விலையில்லைங்கோ.. கார் ஷோருமில் சேல்ஸ்மேனை சினிமா பாணியில் அதிர வைத்த விவசாயி
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகா: நட்புக்காக சினிமா பாணியில் தும்கூரில் அழுக்கு உடை அணிந்து சரக்கு வாகனம் வாங்க சென்ற விவசாயி ஒருவரை கேலி செய்த ஷோரூம் ஊழியர்கள் மிரண்டு போயினர்.
"நட்புக்காக" படத்தில் விஜயகுமார் மற்றும் சரத்குமாரும் கார் வாங்க ஷோரூமுக்கு செல்வார்கள். அப்போது அவர்களின் பேச்சு, உடை பாவனையை பார்த்து ஷோரூம் ஊழியர்கள் கிண்டல் செய்வார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாக்கு மூட்டையில் கொண்டு வந்த பணத்தை கொட்டி விஜயகுமார் அதிர்ச்சி கொடுப்பார். இதேபோன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
விவசாயி
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் ராமனபாளையா கிராமத்தை சேர்ந்தவர் கெம்பேகவுடா. விவசாயியான அவர் முன்தினம் தும்கூர் அருகே உள்ள மகேந்திரா ஷோரூமுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் அழுக்கு உடை அணிந்து சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், கெம்பேகவுடாவிடம் ஷோரூம் ஊழியர்கள் இங்கு எதற்காக வந்தீர்கள் என கிண்டலாக கேட்டுள்ளனர்.
அப்போது விவசாய பொருட்களை எடுத்து செல்லும் வகையில் ஒரு சரக்கு வாகனம் வாங்க வந்துள்ளேன் என்று கெம்பேகவுடா கூறியுள்ளார். அவரது பேச்சை கேட்டு சிரித்த ஷோரூம் ஊழியர்கள், "உங்களிடம் 10 ரூபாய் உள்ளதா? சரக்கு வாகனம் வாங்க வந்துள்ளதாகக் கூறி காமெடி செய்யாதீர்கள் எனக் கூறி கேட்டு கேலி செய்துள்ளனர்.
இந்த ஏடிஎம்-க்கு எப்போ போனாலும் வொர்க் ஆகாது.. கடுப்புல கஸ்டமர் செய்த காரியம்
ஷோரூம் ஊழியர்கள்
இருப்பினும் கெம்பேகவுடா, 'நான் நிஜமாகவே சரக்கு வாகனம் வாங்க தான் வந்தேன்' என்று கூறியுள்ளார். இதற்கு, ஷோரூம் ஊழியர்கள், 'நீங்கள் ஒரு மணி நேரத்திற்குள். ரூ.10 லட்சத்தை கொடுத்துவிட்டு சரக்கு வாகனத்தை வாங்கி செல்லுங்கள்' என்று சவால் விடுத்தனர். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட கெம்பேகவுடா கிராமத்தில் வசித்து வரும் தனது மாமாவான ராம ஆஞ்சநேயாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக ரூ.10 லட்சத்தை ஷோருமூக்கு கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
சவாலில் ஜெயித்த விவசாயி
அவர் சொன்னபடியே ராம ஆஞ்சநேயா ரூ.10 லட்சத்தை ஷோரூமில் கொண்டு வந்து கொடுத்துள்ளார். ரூ.10 லட்சம் ரூபாய் பணத்தை பார்த்து ஷாக் ஆன ஊழியர்கள், சொல்வது தெரியாமல் திகைத்து நின்றனர்.. பின்னர் நீங்கள் கூறியபடி 1 மணி நேரத்தில் ரூ.10 லட்சம் கொடுத்து விட்டேன் எனக்கு சரக்கு வாகனத்தை டெலிவரி செய்யும்படி கட்டளையிட்டார் கெம்பேகவுடா.
மன்னிப்பு
இப்போது தரமுடியாது, 2 நாட்கள் கழித்து சரக்கு வாகனத்தை டெலிவரி செய்வதாக ஊழியர்கள் கூறினர். இதனால் மனவேதனையடைந்த விவசாயி கெம்பேகவுடா மகேந்திரா ஷோரூம் முன்பு போராட்டம் நடத்தினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடந்ததை விசாரித்தனர். அவர்களிடம் புகாரளித்த கெம்பேகவுடா தன்னிடம் அலட்சியமாக நடந்துகொண்ட ஊழியர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். தவறை உணர்ந்து கொண்ட ஊழியர்கள் மன்னிப்பு கேட்டனர். தற்போது இதுதொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரவானால் எல்லையைத் தாண்டும் இளசுகள்.. தமிழ் கிளப் ஹவுஸ்களில் என்ன நடக்கிறது?