இரவானால் எல்லையைத் தாண்டும் இளசுகள்.. தமிழ் கிளப் ஹவுஸ்களில் என்ன நடக்கிறது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 24, 2022 12:17 PM

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன் கிளப் ஹவுசில் பேசப்பட்ட விவாதம் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சில ஆண்கள், பெண்கள் இடம்பெற்று இருந்த அந்த குழுவில் குறிப்பிட்ட மத பெண்களை எப்படி துன்புறுத்தலாம் என்று விவாதிக்கப்பட்டுள்ளது.

Club House Conversations on Sexual Exploitation of Women

தீவிர மத கும்பல் ஒன்றால் இயக்கப்பட்ட அந்த குழுவில் மாற்று மத பெண்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம், எப்படி எல்லாம் அவர்களை கொடுமைப்படுத்தலாம் என்று விவாதம் நடத்தப்பட்டது. சில பெண்களும் இந்த ஹவுசில் இடம்பெற்று இருந்தனர்.. இவர்களின் விவாதம் இணையம் முழுக்க சர்ச்சையான நிலையில் இந்த ஹவுசில் விவாதம் செய்த ஆறு பேரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

சமூக வலைத்தளங்களை உலுக்கிய வட இந்திய கிளப் ஹவுஸ் தளம்:

வடஇந்தியாவை சேர்ந்தவர்கள் இருந்த இந்த கிளப் ஹவுசில் பேசப்பட்ட விஷயங்கள் சமூக வலைத்தளங்களை உலுக்கியது. வடஇந்திய கிளப் ஹவுஸ்கள் பல இப்படி மத ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் வன்மத்தை பரப்பி வரும் நிலையில், தமிழ் நாட்டு கிளப் ஹவுஸ்களும் வித்தியாசமாக இயங்கி வருகின்றன.

Club House Conversations on Sexual Exploitation of Women

கிளுகிளுப்பான பாலியல் உரையாடல்கள்:

கிளப் ஹவுஸ் வந்த தொடக்கத்தில் நிறைய பாடல் பாடும் குழுக்கள் இருந்தன. அதேப்போன்று நிறைய விவாத மேடைகள் உட்பட நல்ல விஷயங்கள் பற்றி பேசும் குழுக்கள் இருந்தது. ஆனால் இப்போதோ கிளப் ஹவுஸ்களில் இருக்கும் 90 சதவிகித குழுக்கள் பாலியல் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளும் குழுக்கள் தான் பெரும்பான்மையாக உள்ளது. மீதம் இருக்கும் குழுக்களில் பெரும்பாலானவை பொய்யான செய்திகளை பரப்பும் குழுக்களும் அதிகம்.

Club House Conversations on Sexual Exploitation of Women

பெண்களிடம் அத்துமீறும் கிளப் ஹவுஸ்:

இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய கிளுகிளுப்பான காரியங்களை ஆண்களும் பெண்களும் பேசிக் கொண்டிருப்பது கிளப் ஹவுஸ் முழுக்க காணப்படுகிறது. அறிவியல் பூர்வமாக, அறிந்துக் கொள்ள வேண்டிய பாலியல் உரையாடல்கள் நடப்பது காலத்தின் தேவை. ஆனால் கொஞ்சமும் தொடர்பு இல்லாத பலர் ஒரு குழுவாக சேர்ந்து பேசுவது, பெண்களிடம் அத்துமீறும் வகையில் பேசுவது கிளப் ஹவுஸ்களில் அதிகமாக காணப்படுகிறது.

இந்த ஏடிஎம்-க்கு எப்போ போனாலும் வொர்க் ஆகாது.. கடுப்புல கஸ்டமர் செய்த காரியம்

பாலியல் சுரண்டல்:

இதுமாதிரியான கிளப் ஹவுஸ்கள் இரவு நேரத்தில்தான் திறக்கப்படும். பத்து மணிக்கு தொடங்கும் பாலியல் ரீதியான கிளுகிளுப்பு உரையாடல் விடிய விடிய நடைபெறும். யார் வேண்டுமானாலும் இதில் பேசுவதை கேட்க முடியும். அட்மின் அனுமதித்தால் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் வெளிப்படையாக பேசலாம். ஒரு பெண்ணை குறிப்பிட்டு இன்னொரு ஆண் பாலியல் ரீதியாக பேசுவதுதான் பெரும்பாலும் இந்த ஹவுஸ்களில் இருக்கும் முக்கிய அம்சம். இதில் பாலியல் ரீதியான சுரண்டல்களை ஆன் செய்கிறான் என்றால் அதை அனுமதிக்கும் பெண்கள் உள்ளே வந்து சுரண்டிக்கொள் என்று அறியாமையில் ஒப்புக் கொடுக்கின்றனர்.

Club House Conversations on Sexual Exploitation of Women

அதாவது அதே ஹவுசில் இணைந்த பெண்ணிடம் அவரை பற்றிய பாலியல் விருப்பங்களை வெளிப்படையாக இந்த ஆண் கூறுவார். அதற்கு இந்த பெண்ணும் தன்னை சுரண்டுகிறார் அல்லது அத்துமீறுகிறார் என்று அறியாமல் பதில் சொல்வார். இதை மொத்த குழுவும் கேட்டு கிளுகிளுப்பு அடையும். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இரண்டு தரப்பும் முழு ஒப்புதலுடன் தான் இந்த உரையாடல் நடக்கிறது என்று தெரியும்.

K L ராகுலின் கேப்டன் பதவி செயல்பாட்டை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!

கிளப் ஹவுஸ் குழுக்களை தொடர்ந்து கண்காணித்து நெறிமுறை படுத்த வேண்டும்:

போதுமான அளவிற்கு நெறிமுறைகள் எதுவும்  இல்லாத காரணத்தால் இந்த குழுக்கள் தொடர்ந்து எல்லை மீறி வருகின்றன. ஆனால் சில நல்ல குழுக்கள் இயங்கி வருகின்றன. கலை, நவீன இலக்கியம், சிறுகதை வாசிப்பு, பெருங்கதையாடல். நவீன எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம். உலக இலக்கிய பேருரைகள், உலக சினிமா குறித்த அறிமுகம், சினிமா தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட கலை சார்ந்த குழுக்களும் உண்டு. ஆனால் இதன் எண்ணிக்கை மிக மிக குறைவு ஆகும். எனவே அரசின் சைபர் கிரைம் பிரிவு இந்த மோசமான கிளப் ஹவுஸ் குழுக்களை தொடர்ந்து கண்காணித்து நெறிமுறை படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Tags : #CLUB HOUSE CONVERSATIONS #SEXUAL EXPLOITATION OF WOMEN #கிளப் ஹவுஸ்

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Club House Conversations on Sexual Exploitation of Women | Tamil Nadu News.