ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியதில் முறைகேடு?.. ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம்... 5 நிமிடத்தில் ரூ.16.50 கோடியாக மாறியது எப்படி?.. ராகுல் காந்தி கடும் தாக்கு!
முகப்பு > செய்திகள் > இந்தியாராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியதில் 16 கோடியே 50 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கொதிப்படையச் செய்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து கோயில் கட்டுவதற்காக ராமர் கோயில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, 70 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை சார்பில் பொதுமக்களிடமிருந்தும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோயில் அருகேயுள்ள ஒரு நிலத்தை அறக்கட்டளை நிர்வாகம் 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதனிடையே, தனிநபரிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அந்த நிலம், சில நிமிடங்களிலேயே அதிக தொகைக்கு அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான், தனி நபர் ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலம், அடுத்த சில நிமிடங்களில் ராமர் கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளைக்கு 18 கோடியே 50 லட்சம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
எனினும், இந்த குற்றச்சாட்டை அறக்கட்டளை நிர்வாகிகள் மறுத்துள்ளனர். இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ராமர் கோயில் நில மோசடி அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், "பகவான் ராமர் என்றாலே உண்மை, நீதி மற்றும் மதம். அவரது பெயரை சொல்லி ஏமாற்றுவது அநியாயம்" என ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அத்துடன் ராமர் கோவில் ஊழல் என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
श्रीराम स्वयं न्याय हैं, सत्य हैं, धर्म हैं-
उनके नाम पर धोखा अधर्म है!#राम_मंदिर_घोटाला
— Rahul Gandhi (@RahulGandhi) June 14, 2021

மற்ற செய்திகள்
