NAATU NAATU : எப்புடிங்க.. வீணையில் 'நாட்டு நாட்டு' பாட்டு.. மிரள வைத்த கலைஞர்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇசை கலைஞர் ஒருவர் ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலை வீணையில் வாசித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
RRR
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம் "RRR". ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.
Images are subject to © copyright to their respective owners.
நாட்டு நாட்டு
பிரபல இசையமைப்பாளர் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது. இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். அது முதல் ஆஸ்கரை வெல்லுமா நாட்டு நாட்டு பாடல்? என ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்தது. கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இசையில் பாராட்டு
இந்நிலையில் பிரபல இசைக்கலைஞரான ஸ்ரீவாணி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில்,"நம்முடைய RRR குழுவை வாழ்த்துவோம். இந்திய திரைப்பட பாடல் ஒன்று முதன்முறையாக சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றிருப்பதால் பெருமையடைகிறேன். மிகப்பெரிய கவுரவம்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டு நாட்டு பாடலை அவர் வீணையில் இசைக்கும் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Let's Congratulate our RRR team.
I am very proud that Natu Natu is the first song from an Indian film to win the Oscar Award for best Original song; Great Honour!!! pic.twitter.com/J1v0jqhfcK
— Veena Srivani (@veenasrivani) March 13, 2023