கடந்த 'பத்து' வருசத்துல எப்போவாது 'டிராவல்' பண்ணியிருந்தீங்கனா ப்ளீஸ்... கண்டிப்பா 'இத' மட்டும் பண்ணிடுங்க! ஏன்னா...' - 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட ஏர் இந்தியா நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஏர் இந்தியா விமான நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

இந்திய விமான நிலையங்களில் ஒன்றான ஏர் இந்தியா உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கிடையே விமான சேவையை வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், 'ஏர் இந்தியாவின் ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட பயணிகள் அமைப்பான சீடாவில் இருந்து, வாடிக்கையாளர்களின் பெயர்கள், கிரெடிட் கார்டு விவரங்கள், செல்போன் எண்கள் ஆகியவை கசிந்துள்ளது.
அவை கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 2021ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி வரை பதிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் ஆகும்.
இதுவரை மொத்தம் சுமார் 45 லட்சம் பயணிகளின் தரவுகள் கசிந்துள்ளதாக தெரிகிறது. எனவே குறிப்பிட்ட ஆண்டுக்குள் பயணம் செய்த வாடிக்கையாளர்கள் பாஸ்வேர்டுகளை மாற்றி கொள்ள வேண்டும் என்றும், அதோடு, சைபர் தாக்குதல் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

மற்ற செய்திகள்
