'இந்த நேரத்துல இப்படி செய்யலாமா'?... 'தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் நடந்த குளறுபடி'... தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியதாகப் புகார் எழுந்தது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையம் உள்ளது. இதில் பிரபலமான தனியார் மையம் மெட்ஆல் ஆய்வகமும் ஒன்று. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் 34,875 பேருக்கும், நேற்று 35,579 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவிலேயே தினசரி கொரோனா அதிக பாதிப்புள்ள மாநிலமாகத் தமிழகம் ஆனது.
இந்த நிலையில் ஐசிஎம்ஆர் பதிவேட்டில் மெட்ஆல் மேற்காட்டிய இரண்டு நாட்களிலும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததை பாசிட்டி என காட்டி, இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியதாகப் புகார் அடிப்படையில் அரசு உரிமத்தை ரத்து செய்துள்ளது. மேலும், மெட்ஆல் மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, கள்ளக்குறிச்சியில் உள்ளவர்கள் எனப் பதிவு செய்துள்ளது.