"இது என்னோட லாஸ்ட் சான்ஸ்-ன்னு கெஞ்சுனேன்.. அப்போ கூட".. EX பாய் ஃப்ரண்ட் பற்றி.. அனிகா விக்ரமன் BREAKING..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Mar 15, 2023 05:38 PM

நடிகை அனிகா விக்ரமன் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய முன்னாள் நண்பர் மூலம் தனக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் அவர்.

Actress Anicka Vikraman shares dispute with her EX boyfriend

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஓடும் கார்ல இருந்து பறந்த பணக்கட்டுகள்.. மர்ம நபர் செஞ்ச வேலை.. தட்டி தூக்கிய போலீஸ்.. வைரலாகும் வீடியோ..!

அனிகா விக்ரமன்

தமிழில் விஷமக்காரன், எங்க பாட்டன் சொத்து உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அனிகா விக்ரமன். இந்த திரைப்படங்களை தவிர மலையாள திரை உலகிலும் பல திரைப்படங்களில் நடித்த அனிகா விக்ரமன் அடிப்படையில் கேரளாவை சேர்ந்தவர். இவர் தன்னுடைய முன்னாள் காதலன் தாக்கியதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தன்னுடைய முன்னாள் காதலன் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ள அனிகா விக்ரமன் இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இந்த புகாரில் நடிகை அனிகா விக்ரமன் தன்னுடைய முன்னாள் காதலர் தன்னை உடல் அளவிலும் மனதளவிலும் பல வருடங்களாகவே துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் பெங்களூர் போலீசாரிடத்தில் புகார் அளித்ததாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தெரிவித்திருந்தார்.

Actress Anicka Vikraman shares dispute with her EX boyfriend

Images are subject to © copyright to their respective owners.

புகார்

இந்நிலையில் நமது சேனலுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் தனக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து கண்ணீருடன் அனிகா பேசியிருக்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில்,"ஆரம்பத்துல எல்லாம் சரியா தான் இருந்தது. அமெரிக்காவுல அவர் பிசினஸ் செஞ்சிட்டு இருந்தாரு. சாதாரணமா காதலர்களுக்கு இடையே வருவதை போல அப்பப்போ சில பிரச்சனைகள் வந்திருக்கு. ஆனா அவர் இவ்வளவு மோசமா நடத்துப்பாருன்னு எனக்கு தெரியாம போயிருச்சு.

Actress Anicka Vikraman shares dispute with her EX boyfriend

Images are subject to © copyright to their respective owners.

ரெண்டு பேரும் சண்டை போட்டோம். அவர் என்னை மோசமா தாக்கிட்டாரு. என் போனை எடுத்துகிட்டாரு. அதை கொடுத்திடு, என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன்னு கால்ல விழுந்து கெஞ்சுனேன். ஆனா, என் முகத்திலேயே தாக்கினார். மேலும், எப்படி நீ இனிமே நடிக்கிறன்னு பாருக்குறேன்னு சொன்னாரு. நான் எழுந்து பாத்ரூமுக்குள்ள ஓடிட்டேன். அதுக்கு அப்புறம் தான் கண்ணாடியில் என் முகத்தை பார்த்ததும் நான் கதறி அழுதேன். அதுக்கப்புறமும் அவரோட கோபம் குறையல. அங்கிருந்து வெளியேறி போலீஸ்-ல புகார் கொடுத்தப்போ அவர் எதிர்பார்த்தது மாதிரியே அங்கிருந்து தப்பிச்சு போய்ட்டாரு" என்றார்.

Also Read | தன்னைத் தானே திருமணம் செஞ்ச பெண்.. போஸ்ட் போட்ட 24 மணி நேரத்துல எடுத்த பரபர முடிவு!!..

Tags : #ANICKA VIKRAMAN #EX BOYFRIEND

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actress Anicka Vikraman shares dispute with her EX boyfriend | India News.