ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஆகிறாரா முன்னாள் CSK வீரர்?...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபாவிற்கான எம்பியாக முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
ஆஹா.. இன்ஸ்டாகிராம்ல வர இருக்கும் புதிய தொழில்நுட்பம்... மார்க் சொன்ன செம்ம தகவல்..!
5 மாநில தேர்தல்
கடந்த வாரம் நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது. உத்திர பிரதேசம், மணிப்பூர், கோவா மற்றும் உத்திரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது பாஜக. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி
பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி வென்றது. இதையடுத்து நேற்றைய தினம் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது. இதனால் புதிய ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
மார்ச் 31 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களே வெற்றிபெற வாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது.
ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான ஹர்பஜன் சிங்-ன் பெயரை பஞ்சாப் மாநிலத்திற்கான ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சி தேர்ந்தெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்று ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில்,"ஆம் ஆத்மி கட்சிக்கும் எனது நண்பர் பகவந்த் மானுக்கும் வாழ்த்துக்கள். அவரது மாதாஜிக்கு இது பெருமையான தருணம்." என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விளையாட்டு வீரர்களை ராஜ்ய சபாவிற்கு அனுப்ப இருப்பதாக ஏற்கனவே பகவந்த் மான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா வேட்பாளராக ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
என்னது ஒரு லிட்டர் பால் இவ்ளோ விலையா..? போராட்டத்தில் இறங்கிய மக்கள்..என்ன நடக்கிறது இலங்கையில்..?