VIDEO: அட.. ஆக்ஷனோட ஆடுறாங்கப்பா.. "BUS-ல போட்ட பாட்டுக்கு" தன்னை மறந்து VIBE ஆன 60S KID பாட்டி..
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்பேருந்தில் ஒளிபரப்பாகக்கூடிய பாடல்களுக்கு தாளம் போடாதவர்கள் இருக்க முடியாது. அதுவும் கேட்டு கேட்டு பழகிய, மனதிற்கு பிடித்துப் போன பல பாடல்களுக்கு உடனடியாக வைப் ஆகி விடுவோர் உண்டு.

குறிப்பாக ஒருவர் எந்த காலகட்டத்தில் பிறந்தாரோ அந்த காலகட்டத்தில் வந்த ஹிட் பாடல்களை நினைவில் வைத்துக் கொண்டு, எந்த வருடம் அந்த பாடல்களை மீண்டும் கேட்டாலும் உற்சாகமாகி விடுவார்கள். அப்படி கருப்பு வெள்ளை காலத்திலிருந்து தற்போது வரையிலான பல பாடல்களுக்கு பெரியோர் முதல் சிறியோர் வரை தங்களை அறியாமலே எக்சைட் ஆகி விடுவது உண்டு.
ஒவ்வொருவரின் சுபாவம் மற்றும் சுற்றி இருக்கும் சூழலுக்கு தகுந்தாற்போல் ஒவ்வொருவரும் பாடல்களுக்கு ஏற்ப தங்களுடைய ரியாக்ஷனை வெளிப்படுத்துவார்கள். பேருந்துகளில் சிலர் கைகளை கொண்டு மெதுவாக தட்டி தாளம் போடுவதும், சிலர் இருக்கைகளையோ கம்பிகளையோ தட்டி தாளம் போடுவது உண்டு. இன்னும் சிலர் தலையை ஆட்டுவார்கள். ஒரு சிலர்தான் எழுந்தே ஆடி விடுவார்கள். அப்படித்தான் சமீபத்தில் தமிழ்நாட்டு பேருந்து ஒன்றில் போட்ட பாடலைக் கேட்டு ஒரு பாட்டிம்மா வேற லெவலில் ஆடி இருக்கிறார்.
பேருந்து பயணத்தில் சென்று கொண்டிருக்கும், பார்ப்பதற்கு எளிய வகையில் தோற்றமளிக்கும் பாட்டிம்மா ஒருவர், பேருந்தில் போட்ட, ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ என்கிற 60-களில் எம்ஜிஆர் நடித்த எங்கள் வீட்டு பிள்ளை பட பாடல் ஒன்றை கேட்டதும் உடனடியாக Vibe ஆகி, நின்றபடியே உற்சாகமாக நடனமாடுகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ வீடியோ எடுப்பதை தெரிந்ததும் பார்த்து சிரிக்கிறார். குழந்தை மனதுடன் பாட்டி தன்னை மறந்து ஆடிய இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
நான் மாந்தோப்பில் நின்று இருந்தேன்...... pic.twitter.com/SkrbaDG5mz
— Priya (@Priya17049179) September 28, 2022
இதை பார்த்த நெட்டிசன்கள், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த வயதில் பாட்டி இயல்பான மனதுடன் கேட்ட பாடலுக்கு இடம், பொருள் கருதாமல் உற்சாகமாகி இருக்கிறார் என்று கூறி நெகழ்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
