'மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால்'... 'SBIயின் அதிரடி அறிவிப்பு'... ஜூலை 1 முதல் அமல்!
முகப்பு > செய்திகள் > வணிகம்கட்டண வசூல் முறை வரும் ஜூலை 1 முதல் அமலாகிறது.
பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு வைப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாதத்திற்கு நான்கு முறை இந்த கணக்கை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம்.
அதற்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. இந்தக் கட்டண வசூல் முறை வரும் ஜூலை 1 முதல் அமலாகிறது. இலவச நிலையைக் கடந்து பணத்தை எடுக்கும் வாடிக்கையாளர்களிடம் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது.
இது வங்கி கிளையில் பணம் எடுப்பது, ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுப்பது என அனைத்திற்கும் பொருந்தும் என SBI தெரிவித்துள்ளது. அதே போல இந்த கணக்கை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு நிதி ஆண்டில் 10 காசோலைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வங்கி தெரிவித்துள்ளது. அதற்கு மேல் காசோலைகளைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும்.
2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் மட்டுமே பாரத ஸ்டேட் வங்கி தனது பேஸிக் சேமிப்பு வைப்பு கணக்கு வைத்துள்ள சுமார் 12 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக ஐஐடி - பாம்பேவின் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.