ரூ.2 லட்சம் வேணுமா...? 'அந்த கார்டு' அப்ளை பண்ணினா மட்டும் போதும்...! ஆனா நீங்க ஒரு விஷயம் மட்டும் பண்ணிருக்கணும்...' - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வங்கி...!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Issac | Mar 17, 2021 08:35 PM

2014-ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது.

Sbi announces jan dhan account holders Rs 2 lakh Rupay card

மத்திய, மாநில அரசின் நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. மாநில அரசுத் திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அதற்கான தொகை உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த ஜன் தன் கணக்குகளின் கீழ் ரூபே கார்டுகளுக்கு விண்ணப்பித்தால் காப்பீடு வசதி பெறலாம் என்று இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  ஜன் தன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்து ரூ.2 லட்சம் வரையில் விபத்துக் காப்பீட்டு வசதியைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் SBI வங்கியின் ஜன் தன் திட்டத்தின் கீழ் இதுவரை கணக்கு தொடங்கியவர்களும், இனி கணக்கு தொடங்குபவர்களும் இந்த சலுகையைப் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காப்பீட்டு வசதியைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாகும். ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆதாருடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே ஜன் தன் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்னும் இரண்டு வாரங்களில் இணைப்பது பயனளிக்கும். ஆதார் இணைப்புக்குப் பிறகு SBI வங்கி அறிவித்துள்ள இந்த காப்பீட்டு வசதியைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sbi announces jan dhan account holders Rs 2 lakh Rupay card | Business News.