யம்மாடி.. தொழிலதிபர் அதானியின் ஒருநாள் வருமானம் இவ்வளவு கோடியா..? முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்திய தொழிலதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான கவுதம் அதானி இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்நிலையில், அவருடைய ஒருநாள் வருமானம் குறித்து வெளியாகியுள்ள தகவல் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Also Read | இந்திய ராணுவத்தில் இருந்து விடைபெறும் அபிநந்தனின் மிக் -21 ரக விமான படைப்பிரிவு.. முழு விபரம்..!
கவுதம் அதானி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் கவுதம் அதானி. இவருடைய பெற்றோர் சாந்திலால் அதானி - சாந்தி ஆவர். உள்ளூரிலேயே பள்ளிக் கல்வியை முடித்த கவுதம் அதானி, குஜராத் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் சேர்ந்தார். ஆனால், இரண்டாம் ஆண்டே கல்லூரியை விட்டுவிட்டு பணிக்குச் சென்றுவிட்டார். துணி வியாபாரம் செய்துவந்த தனது தந்தையை அருகிலிருந்து பார்த்து வளர்ந்த அதானி 1988 ஆம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட்ஸ் எனும் ஏற்றுமதி நிறுவனத்தை துவங்கினார். இதுவே, இன்று உலகளவில் பிரபலமான அதானி குழுமமாக வளர்ந்து நிற்கிறது. பிரீத்தி என்பவரை அதானி திருமணம் செய்துகொண்டார். அதானி அறக்கட்டளையை தற்போது ப்ரீத்தி நிர்வகித்து வருகிறார்.
ஹாரூன் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலில் (IIFL Wealth Hurun India Rich List 2022) அதானி முதலிடத்தில் இருக்கிறார். அவருடைய சொத்துமதிப்பு 10,94,400 கோடி என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியை விட 3 லட்சம் கோடி ரூபாய் சொத்து அதிகமாக அதானி வசம் இருப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒருநாள் வருமானம்
அதானி கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் 1600 கோடி ரூபாயை வருமானமாக பெற்றிருப்பதாக ஹாரூன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2012 இல், அதானியின் சொத்து அம்பானியின் செல்வத்தில் ஆறில் ஒரு பங்கை விட குறைவாகவே இருந்திருக்கிறது. ஆனால், தற்போது அதானி இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி, அதானியைவிட ஒரு லட்சம் கோடி அதிகமாக சொத்து வைத்திருந்ததாகவும், இந்த ஆண்டு அதானி, அம்பானியை விட 3 லட்சம் கோடி அதிக சொத்து உடையவராக வளர்த்திருக்கிறார் என்றும் ஹாரூன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | 75 வருஷத்துக்கு முன்னாடி எடுக்கப்பட்ட ராணியின் புகைப்படம்.. யப்பா.. இது பொக்கிஷம் போலயே..!

மற்ற செய்திகள்
