உலக பணக்காரர்கள் பட்டியல்.. எந்த இந்தியரும் தொடாத இடத்தில் கவுதம் அதானி.. மிரள வைத்த தொழிலதிபர்!!
முகப்பு > செய்திகள் > உலகம்ப்ளூம்பெர்க் பில்லினர் தற்போது வெளியிட்டுள்ள உலகின் பணக்காரர்கள் பட்டியலின் படி, இந்தியாவின் கவுதம் அதானி பிடித்துள்ள இடம், தற்போது பலரையும் மிரள வைத்துள்ளது.
ப்ளூம்பெர்க் பில்லினர், உலகின் பணக்காரர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி, ஸ்பேக்ஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் முதல் இடத்தில் உள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக, அமேசானின் ஜெஃப் பெசோஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ள நிலையில், மூன்றாம் இடத்தில் உள்ளார் இந்தியாவின் கவுதம் அதானி.
மொத்தம் 137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ள அதானி, இதற்கு முன்பு மூன்றாவது இடத்தில் இருந்த பிரான்ஸ் நாட்டின் லூயி வுய்ட்டன் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளி, தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார் அதானி. இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில், ஆசியாவின் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, ஜாக் மா உள்ளிட்டோர் கூட இதுவரை இடம் பெற்றது கிடையாது.
தற்போது 60 வயதாகும் கவுதம் அதானி, நிலக்கரிச் சுரங்கம், சிமெண்ட், மின்சாரம், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். தனது அனைத்து தொழில்களிலும் அபார வளர்ச்சி கண்ட அதானி, ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்திருந்தார். முன்னதாக, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், 10 ஆவது இடத்தில் இருந்த அதானி, மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டு, கடந்த ஜூலை மாதம், பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4 ஆவது இடத்தை பிடித்திருந்தார்.
அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது ப்ளூம்பெர்க் பில்லினர் வெளியிட்டுள்ள பட்டியலில் அதானி மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தற்போதைய நிலவரப்படி, பில் கேட்ஸ் ஐந்தாவது இடத்திலும், வாரன் பஃபட் 6 ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில், முதல் முறையாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ள தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | "பாக்க பாம்பு மாதிரியே இருந்துச்சு, ஆனா".. மர்ம உயிரினத்தை பார்த்து உறைந்து போன நெட்டிசன்கள்