VTK D Logo Top
www.garudabazaar.com

VIDEO: விக்ரம் நடிக்கும் "துருவ நட்சத்திரம்".. ரிலீஸ் எப்போ? கௌதம் மேனன் கொடுத்த தெறி அப்டேட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்கும் "துருவ நட்சத்திரம்" படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்..

Vikram Gautam Menon Dhuruva Natchathiram Movie Release Update

Also Read | VTK: வெந்து தணிந்தது காடு.. கௌதம் மேனன் & சிம்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட சூர்யா! சூப்பர்ல

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. நீண்ட நாட்களாக உருவாகி வரும் இந்த படம் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். தாமரை எழுதிய 'ஒரு மனம்' என்ற சிங்கிள் பாடலை கார்த்திக் மற்றும் ஷாஷா  இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Vikram Gautam Menon Dhuruva Natchathiram Movie Release Update

2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்திற்கு தற்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சில நாட்களுக்கு முன் நடிகர் விக்ரம் & இயக்குனர் கௌதம் மேனன் சந்தித்து படத்தின் அடுத்த கட்ட வேலைகள் மற்றும் பின் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசித்து உள்ளனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன், வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக "துருவ நட்சத்திரம் படம் எப்போ ரிலீஸ் ஆகும்?" என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு "இன்னும் 3 மாதங்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்து வருவதாக" கௌதம் மேனன் கூறினார்.

Vikram Gautam Menon Dhuruva Natchathiram Movie Release Update

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதேபோல் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கப்போகும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | PONNIYIN SELVAN: 'தஞ்சைக்கு யார் வர்றீங்க?' .. ஆதித்த கரிகாலனின் ட்வீட்.. ஜாலியாக பதிலளித்த 'PS1' நடிகர்கள்!

VIDEO: விக்ரம் நடிக்கும் "துருவ நட்சத்திரம்".. ரிலீஸ் எப்போ? கௌதம் மேனன் கொடுத்த தெறி அப்டேட்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Gautam Menon Dhuruva Natchathiram Movie Release Update

People looking for online information on Gautham Vasudev Menon, Natchathiram Movie, Natchathiram Movie Release Update, Vikram will find this news story useful.