www.garudabazaar.com

இராவண அசுரா.‌. 'விக்ரம் வேதா' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் போஸ்டர்.. சும்மா தீய்யா இருக்கு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியில் உருவாகும் விக்ரம் வேதா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Hrithik Roshan Saif Ali Khan Vikram Vedha Trailer Release Poster

Also Read | கார்கில் போர் நினைவிடத்தில் நடிகர் அஜித்குமார் மரியாதை.. தீயாய் பரவும் சூப்பர் ஃபோட்டோ!

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

இந்த படத்தை இந்தியில்  இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கி உள்ளனர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர்.

தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு  (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியது. பின்னர் லக்னோவில் நடைபெற்றது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

Hrithik Roshan Saif Ali Khan Vikram Vedha Trailer Release Poster

ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் வெளியாகி உள்ளது. நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு "வேதா" கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியாகி இருந்தது. பின் பிப்ரவரி 24-ல் விக்ரம் கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியானது. சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும்  செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது.

Hrithik Roshan Saif Ali Khan Vikram Vedha Trailer Release Poster

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் நாளை முதல் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. தசரா பண்டிகை பின்னணியில் ராவண வதம் செய்வது போல் போஸ்டர் அமைந்துள்ளது. ஹிருத்திக் ரோஷன் & சயிப் அலிகான் இருவரும் போஸ்டரில் ஆக்ரோஷமான தோற்றத்தில் தோன்றியுள்ளனர்.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலர்ஸ் சினிப்ளக்ஸ் சேனல் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை டி- சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | Ponniyin Selvan: "யாக்கை திரி".. பாட்டை போட்டதும் Vibe ஆன சித்தார்த் & த்ரிஷா.. வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Hrithik Roshan Saif Ali Khan Vikram Vedha Trailer Release Poster

People looking for online information on Hrithik Roshan, Saif Ali Khan, Vikram Vedha, Vikram Vedha Trailer updates will find this news story useful.