VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ்.. வாழ்த்திய சிவகார்த்திகேயன்... பதிலுக்கு சிம்பு வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வெந்து தணிந்தது காடு' படத்தின் படக்குழுவினரை சிவகார்த்திகேயன் வாழத்தியுள்ளார்.

Sivakarthikeyan wishes Venthu Thaninthathu Kaadu Release

இந்த படம் இன்று செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி இன்று அதிகாலை 5 மணிக்கு திரையிடப்படும் என திரையரங்குகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் படக்குழுவினரை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். "வாழ்த்துகள் சிம்பு சார், கௌதம் மேனன் சார் & வெந்து தணிந்தது காடு படக்குழுவினருக்கும் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துகள் 👍😊 ரஹ்மான் சாரின் இசை அருமையாக உள்ளது. மறக்குமா நெஞ்சம் பாடல் ❤️❤️" என சிவகார்த்திகேயன் ட்வீட் செய்ய, இந்த ட்வீட்டுக்கு  நடிகர் சிலம்பரசன், சிவகார்த்திகேயனை டேக் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.

 

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

Sivakarthikeyan wishes Venthu Thaninthathu Kaadu Release

வெந்து தணிந்தது காடு படத்திற்கு இந்திய அரசின் சென்சார் போர்டு 

U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan wishes Venthu Thaninthathu Kaadu Release

People looking for online information on Simbhu, Sivakarthikeyan, SK, Str, Venthu Thaninthathu Kaadu will find this news story useful.