www.garudabazaar.com
iTechUS

மன்னிப்பு கேட்ட சமந்தா.. விஜய் தேவரகொண்டா பதில் ட்வீட்.. நெகிழ்ந்த ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. 

Vijay Deverakonda Samantha Ruth Prabhu about Kushi Movie

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | விஜய் நடிக்கும் தளபதி 67 .. முக்கிய உரிமத்தை கைப்பற்றிய உலகின் முன்னணி நிறுவனம்!

நடிகர் விஜய் தேவரகொண்டா & சமந்தா நடிப்பில் 'குஷி'  திரைப்படம் உருவாகி வருகிறது.  ‘குஷி’ படத்தை இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கி வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் கடந்த ஆண்டு வெளியிட்டனர்.  'குஷி' உற்சாகமான.. வண்ணமயமான.. காதல் கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு ஹிருதயம் படத்தின் இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

Vijay Deverakonda Samantha Ruth Prabhu about Kushi Movie

Images are subject to © copyright to their respective owners.

விஜய் தேவரகொண்டா, சமந்தா உடன் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் காலா, கபாலி, மெட்ராஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Vijay Deverakonda Samantha Ruth Prabhu about Kushi Movie

Images are subject to © copyright to their respective owners.

'குஷி' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று  தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.

Vijay Deverakonda Samantha Ruth Prabhu about Kushi Movie

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை சமந்தா தமது டிவிட்டர் பக்கத்தில் குஷி படம் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், "குஷி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும். விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என சமந்தா கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா, "நாங்கள் எல்லோரும் நீங்கள் பரிபூரண குணமடைந்து படப்பிடிப்புக்கு வரவும் உங்கள் பெரிய சிரிப்பை காண ஆவலாக காத்திருக்கிறோம்". என பதில் ட்வீட் செய்துள்ளார். இதற்கு சமந்தா மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read | மகேஷ் பாபு நடிக்கும் 'SSMB28'.. மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்ட OTT உரிமம்.. இத்தனை கோடி ரூபாயா!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Deverakonda Samantha Ruth Prabhu about Kushi Movie

People looking for online information on Kushi Movie, Samantha, Vijay Deverakonda will find this news story useful.