www.garudabazaar.com

'சகுந்தலம்' படத்தின் சோகமான ஸ்டில்லை பகிர்ந்து சமந்தா போட்ட பதிவு.‌. TRENDING இதான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌.

Samantha Started Shaakunthalam Movie Dubbing

Also Read | "ஜெட் ஸ்கை ஓட்ட கத்து கொடுத்ததே அஜித் சார் தான்😊".. மஞ்சு வாரியர் EXCLUSIVE

விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். 

சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

சமந்தா, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா', "குஷி' படங்களில் தற்போது நடித்து வருகிறார்.  நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.

Samantha Started Shaakunthalam Movie Dubbing

சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர்  V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார்.

Samantha Started Shaakunthalam Movie Dubbing

Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார்.  வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.

இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார்.

இந்த படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

Samantha Started Shaakunthalam Movie Dubbing

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா, சகுந்தலம் படத்திற்கு டப்பிங் பணிகளை மேற்கொண்டு வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சகுந்தலை கதாபாத்திரத்தின் சோகமான ஸ்டில்லை பகிர்ந்த சமந்தா, "பைத்தியக்காரத்தனம், துக்கம் மற்றும் உலகத்தில் இழந்த அனைத்துக்கும்  மருந்து கலை, அதன் மூலம் நான் குணமடைந்து வீட்டிற்குச் செல்வேன்.- நிக்கி ரோவ்" என பதிவிட்டுள்ளார்.

Also Read | "அன்பு செலுத்த அச்சப்பட வேண்டாம்".. வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Started Shaakunthalam Movie Dubbing

People looking for online information on Samantha, Shaakunthalam, Shaakunthalam Movie Dubbing will find this news story useful.