Veetla Vishesham Others Page USA

“அம்மாக்கு என்னாச்சுப்பா…” திணறும் சத்யராஜ்… கலகலப்பான ’வீட்ல விசேஷம்’ Sneak peek காட்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வீட்ல விசேஷம் படத்தின் புதிய கலகலப்பான ஸ்னீக் பீக் காட்சி தற்போது இணையத்தில்  வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

Veetla vishesham movie interesting sneak peek scene revealed

Also Read | அமெரிக்க BOX OFFICE-ல் ‘விக்ரம்’ படைத்த சாதனை… இதுவரை இத்தனை கோடி வசூலா?… வெளியான தகவல்

வீட்ல விசேஷம்….

LKG மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களின் வெற்றியை அடுத்து தற்போது RJ பாலாஜி, போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆகும். தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கியும் உள்ளார் பாலாஜி. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளின் நடுவே நடைபெற்று கவனத்தைப் பெற்றது.

Veetla vishesham movie interesting sneak peek scene revealed

Cross Talk with RJ balaji

இந்த படத்தின் ப்ரமோஷன்களை மிகவும் வித்தியாசமான பாணியில் RJ பாலாஜி மேற்கொண்டு வருகிறார். பல குடும்ப வளைகாப்பு நிகழ்ச்சிகளுக்கு சென்ற படக்குழுவினர், அடுத்து ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் நடித்தனர். அதையடுத்து சமீபத்தில் RJ பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் படத்தில் வருவது வயதான அம்மா கர்ப்பமாக இருப்பது அவர்களின் குழந்தைகளுக்கு தெரியவரும் போது எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது இடம்பெற்றுள்ளது. போன் செய்து அவர்களின் தாயார் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் போல பேசி, அவர்கள் அந்த செய்திக்கு எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர்வினையாற்ற, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Veetla vishesham movie interesting sneak peek scene revealed

Sneak peek

இந்நிலையில் இப்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. படத்தின் முக்கியக் காட்சியான ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை சத்யராஜ் தன்னுடைய மகன்களிடம், அம்மாவிடமும் சொல்ல கஷ்டப்படு திணறும் காட்சியை இப்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சுவாரஸ்யமான இந்த காட்சி ரசிகர்களின் படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RJ Balaji (@irjbalaji)

Also Read | “பெற்றோரை அவர்கள் இருக்கும்போதே… ”… ‘டான்’ பார்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் Tweet

 

தொடர்புடைய இணைப்புகள்

Veetla vishesham movie interesting sneak peek scene revealed

People looking for online information on RJ Balaji, Veetla Vishesham, Veetla vishesham movie, Veetla vishesham sneak peek scene will find this news story useful.