777 Charlie Trailer

R J பாலாஜி நடிக்கும் "வீட்ல விசேஷம்".. சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூரின் பே வியூ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் திரைப்படத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார்.

fun-filled ride with Veetla Vishesham Censored ‘U’ for all

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. ரேடியோவில் சினிமா விமர்சனங்கள் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். சினிமாவுக்கு செலவளிக்கும் 120 ரூபாயை மையமாக வைத்தே இவருடைய சினிமா விமர்சனங்கள் புகழ் பெற்றன.

பின் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாகும், தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ரீமேக் படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் யோகி பாபு ஆர். ஜே பாலாஜியுடன் கௌரவத்தோற்றத்தில் நடிக்கிறார்.

fun-filled ride with Veetla Vishesham Censored ‘U’ for all

கோயமுத்தூரில் நடைபெற்ற இந்த படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் நடந்து முடிந்தது. ஜூன் 17 அன்று இந்த படம் உலகமெங்கும் ரிலீசாக உள்ளது.  இப்படத்துக்கு சென்சார் போர்டு மூலம் U சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு பிரத்யேக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

fun-filled ride with Veetla Vishesham Censored ‘U’ for all

People looking for online information on R J Balaji, Veetla Vishesham will find this news story useful.