www.garudabazaar.com
iTechUS

வாரிசு பட வெற்றி கொண்டாட்டம்.. விஜய்யுடன் வம்சியின் மனைவி & மகள்.. வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் வெற்றி விழா கொண்டாடட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Varisu Movie Success Celebration with Vijay Vamsi family

Also Read | தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. தென் தமிழகத்தின் முக்கிய நகரத்தில் ஷூட்டிங்? வேறமாரி!

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த வாரம் (11.01.2023) முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Varisu Movie Success Celebration with Vijay Vamsi family

Image Credit : Malini Paidipally Instagram

இப்படத்திற்கு இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Varisu Movie Success Celebration with Vijay Vamsi family

Image Credit : Malini Paidipally Instagram

இந்நிலையில் வாரிசு படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ஷாம், ஶ்ரீ காந்த், எஸ் ஜே சூர்யா, ஆகியோருடன் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டு கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது எஸ் ஜே சூர்யாவுக்கு தில் ராஜூ கேக் ஊட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின.

Varisu Movie Success Celebration with Vijay Vamsi family

Image Credit : Malini Paidipally Instagram

மேலும் இந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் வம்சியின் மனைவி மாலினி & மகள் ஆத்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். மாலினி & ஆத்யா இருவரும் நடிகர் விஜய் உடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

Also Read | சுந்தர் சி இயக்கத்தில் விஜய் சேதுபதி?.. சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பார்ட்..? போடு செம்ம

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Movie Success Celebration with Vijay Vamsi family

People looking for online information on Vamsi, Varisu, Varisu Movie Success Celebration, Vijay Vamsi family will find this news story useful.