www.garudabazaar.com
iTechUS

வாரிசு வெற்றி கொண்டாட்டம்.. கேக் வெட்டி செலிபிரேட் செய்த படக்குழு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான வாரிசு படத்தின் வெற்றியை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடி இருக்கின்றனர்.

Actor Vijay Varisu Crew celebrate success of the movie

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த (11.01.2023) அன்று வெளியாகி உள்ளது. அன்று அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக வாரிசு படம் வெளியான முதல் 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அதிகாரப்பூர்வாக அறிவித்திருந்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது வாரிசு. இதனை முன்னிட்டு இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று இப்பட குழுவினர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். 

ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் 'தில்' ராஜு மற்றும் இயக்குனர் வம்சி ஆகியோரது வீட்டில் இந்த சக்ஸஸ் பார்ட்டி நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் நடிகர் விஜய், சங்கீதா, ஸ்ரீகாந்த், ஷியாம், எஸ்.ஜே சூர்யா, சம்யுக்தா, படத் தொகுப்பாளர் பிரவீன் கே.எல், படத்தின் இசைமையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டனர். கேக் வெட்டப்பட்டு ஒருவருக்கொருவர் ஊட்டிவிடும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay Varisu Crew celebrate success of the movie

People looking for online information on Dhil Raju, Vamsi, Varisu, Vijay will find this news story useful.