ET Others
www.garudabazaar.com

தியேட்டரில் தெறிக்க விட்ட ’வேற மாரி’ பாடல்… வெளியானது வீடியோ வெர்ஷன் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு இரண்டரை ஆண்டுகள் இடைவெளியில் வெளியானது வலிமை திரைப்படம். அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய திரைப்படமான வலிமை பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பைக் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு இணையாக செண்ட்டிமெண்ட் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருந்தார் இயக்குனர் ஹெச் வினோத். இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஹெச் வினோத்- அஜித் – போனி கபூர் கூட்டணியில் அடுத்த படம் உருவாக உள்ளது. இது இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும்.

Valimai vera maari video version song released in internet

எதற்கும் துணிந்தவன் interval-ல் செம்ம சர்ப்ரைஸ்… கொண்டாடி தள்ளிய விஜய் ரசிகர்கள்!

வலிமை படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள்

வலிமை படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக கதிர் பணியாற்றினார் அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றினார்கள். விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றினார். அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, ஜி எம் சுந்தர், புகழ், சயித்ரா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாடல்களுக்கான இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைக்க, பின்னணி இசையை யுவனோடு இணைந்து ஜிப்ரான் அமைத்திருந்தார்.

Valimai vera maari video version song released in internet

யுவனின் வேற மாரி பாடல்கள்

வலிமை திரைப்படத்தில் யுவன் இசையில் உருவாகி வெளியாகியிருந்த ‘நாங்க வேற மாரி’ எனும் தொடக்க குத்து பாடல், ‘அம்மா’ செண்டிமெண்டில் உருகவைக்கும் அம்மா பாடல் ஆகியவை படத்தின் ரிலிஸுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.  இந்த பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தன. வலிமை திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருவாக்கிய பாடல்களும் விசில் தீம் இசையும் ரசிகர்களைக் கவரும் அம்சங்களாக அமைந்திருந்தன.

Valimai vera maari video version song released in internet

தியேட்டரில் தெறிக்க விட்ட வேற மாரி பாடல்

அஜித்தின் அறிமுகப் பாடலாக படத்தில் இடம்பெற்றிருந்த வேற மாரி பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.  இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். தியேட்டரில் இந்த பாடல் ஓடும்போது ரசிகர்களும் எழுந்து நின்று ஆடி கொண்டாடித் தள்ளினர். பாடலை உருவாக்கிய விதம்  அந்த அளவுக்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இப்போது இந்த பாடலின் வீடியோ வெர்ஷன் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இன்று மாலை 5 மணிக்கு வீடியோ வடிவில் பாடல் வெளியாகும் என சோனி நிறுவனம் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அது முதல் ஆவலாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு இப்போது பாடல் வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேருக்கு நேர் to எதற்கும் துணிந்தவன் – நடிகர் சூர்யாவின் 25 வருட திரைப்பயணம்!

தொடர்புடைய இணைப்புகள்

Valimai vera maari video version song released in internet

People looking for online information on Ajith Kumar, அஜித்குமார், போனி கபூர், வலிமை, Boney kapoor, H Vinoth, Valimai will find this news story useful.