www.garudabazaar.com

VIDEO: "நடிகர் அஜித் கூட படத்துல நடிக்க சான்ஸ் வேணும்" - பீஸ்ட் ஹீரோயினின் ஆசை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பூஜா ஹெக்டே நடிகர் அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Beast Radhe shyam pooja hegde willing to act with Ajith Kumar

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று  ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Beast Radhe shyam pooja hegde willing to act with Ajith Kumar

நடிகை பூஜா ஹெக்டே பேசியதாவது…

நாங்கள் கடந்த 5 வருடங்களாக உழைத்த உழைப்பு உங்களுக்காக உருவாக்கிய காதல் கதை உங்களிடம் வந்துள்ளது. இந்த கடின காலத்தை தாண்டி, இந்த படத்தை எடுத்து வந்துள்ளோம், பிரமோத் மிக பிரமாண்டமாக படத்தை உருவாக்கியிருக்கிறார், ராதே பாத்திரம் எனக்கு மிக சிறப்பானதொரு பாத்திரம். சத்யராஜ் சாருடன் காட்சி இல்லாதது வருத்தம், பிரபாஸ் மிகச்சிறப்பான ஒத்துழைப்பு தந்தார்,  மனோஜ் உடன் பீஸ்ட் படமும் செய்கிறேன். இந்தப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நன்றி. என பேசினார்.

Beast Radhe shyam pooja hegde willing to act with Ajith Kumar

பின் தனிப்பட்ட பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அதில் பீஸ்ட் படம் பற்றி அடுத்த மாதம் பேசுவதாகவும், விஜய் நல்ல நடனமாடுபவர் என்றும், அரபிக்குத்து பாடலின் ரீச் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். நடிகர் அஜித்துடன் நடிப்பீங்களா? என கேட்ட கேள்விக்கு, உங்களில் யாராவது அஜித்துடன் என்னை நடிக்க வைக்க சான்ஸ் ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்றால் ஏற்படுத்தி கொடுங்கள் என சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். 

1970 களில் ஐரோப்பாவில் நடக்கும் கதை. கைரேகை நிபுணராக வித்தியாசமான பாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார், அகில இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருக்கிறார், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையேயான பற்ற வைக்கும் கெமிஸ்ட்ரி என பல்வேறு காரணங்களுக்காக இந்த காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மார்ச் 11, 2022 அன்று திரைக்கு வரவுள்ள பன்மொழிப் படமான ராதே ஷ்யாமை, ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். 

VIDEO: "நடிகர் அஜித் கூட படத்துல நடிக்க சான்ஸ் வேணும்" - பீஸ்ட் ஹீரோயினின் ஆசை! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Beast Radhe shyam pooja hegde willing to act with Ajith Kumar

People looking for online information on Ajith Kumar, AK61, Beast, Pooja Hegde, Prabhas, Radhe Shyam, Valimai, Vijay will find this news story useful.