www.garudabazaar.com

வலிமை தயாரிப்பாளருடன் இணையும் RJ பாலாஜி.. ஃபர்ஸ்ட் லுக் எப்போ? மங்களகரமான அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.

RJ Balaji Joins Valimai Producer Firtst Look update

வடிவேலு .. ஃபகத் பாசில்.. செம.. மாரி - உதயநிதி படத்தின் வேற லெவல் டைட்டில்

எஃப் எம் to சினிமா:

வானொலியில் தொகுப்பாளராக வேலை செய்துவந்த ஆர் ஜே பாலாஜி, தனது நகைச்சுவையான மற்றும் தனித்துவமான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்தவர். சினிமா விமர்சனங்களை செய்துவந்த அதன் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தால் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதலில் நகைச்சுவை வேடங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அவருக்கு நானும் ரௌடிதான் படம் திருப்புமுனையாக அமைந்தது.

காமெடியன் to ஹீரோ:

அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு பல படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் ஆகிய படங்களில் அவர் நகைச்சுவையாக மட்டும் இலலாமல் குணச்சித்திரமாக நடித்து தனது திறமையை நிருபித்தார். இதையடுத்து அவர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எல் கே ஜி என்ற அரசியல் பகடி படத்தில் கதை, திரைக்கதையில் பங்களிப்பு செய்து நடித்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கி இருந்தார்.

RJ Balaji Joins Valimai Producer Firtst Look update

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியால் மீண்டும் ஐசரி கணேஷோடு இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை சரவணன் என்பவரோடு இணைந்து இயக்கினார். மூக்குத்தி அம்மன் படத்தில்  அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்க, மத்திய தரவர்க்க குடும்பஸ்தனாக ஆர் ஜே பாலாஜி நடித்திருந்தார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அம்மன் படமாக அமைந்ததால்  மூக்குத்தி அம்மனுக்கு குடும்ப திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைததது.

RJ Balaji Joins Valimai Producer Firtst Look update

போனி கபூருடன் கூட்டணி

இதையடுத்து ஆர் ஜே பாலாஜி இப்போது போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்தில் இணைந்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதாக தெரிகிறது. இதுவரை படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்போது ஆர் ஜே பாலாஜி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் 18 ஆம் தேதி வெளியாகும் என தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் மங்களகரமான போஸ்டர் ஒன்றையும் வெளியிடவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

RJ Balaji Joins Valimai Producer Firtst Look update

ARR - உதயநிதி - மாரி செல்வராஜ்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தெறி கூட்டணி

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji Joins Valimai Producer Firtst Look update

People looking for online information on போனி கபூர், வலிமை தயாரிப்பாளர், Boney kapoor, RJ பாலாஜி, RJ Balaji, Valimai Producer will find this news story useful.