www.garudabazaar.com

Surya42 : கோவாவில் நடந்து வந்த சிறுத்தை சிவா - சூர்யா பட ஷூட்டிங். .. வெளியான அடுத்த அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சிறுத்தை' சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும்   "சூர்யா 42" படத்தின் படப்பிடிப்பு lavish hotel செட் அமைக்கப்பட்டு கடந்த (ஆகஸ்ட் 24, 2022) தேதி முதல் படப்பிடிப்பு துவங்கியது.

Surya 42 Goa schedule shooting wrapped directed by Siruthai Siva

Also Read | BB6 Tamil : அசல் கோலாரை பாத்து ஆயிஷா சொன்ன வார்த்தை??.. 2வது நாளுலேயே கண்ணீர் விட ஆரம்பிச்சுட்டாங்க!!

‘சூர்யா 42’ என்று தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படம், Studio Green நிறுவனத்தின் 25 வது படமாக உருவாகிறது. இப்படத்தினை  K.E.  ஞானவேல்ராஜா, மிகப் பெரிய பான்-இந்திய வெற்றி திரைப்படங்களில் சிலவற்றைத் தயாரித்த  UV Creations வம்சி-பிரமோத்  உடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, மிலன் கலை இயக்கம் செய்கிறார்.  சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகள்  அமைக்கிறார், ஆதி நாராயணா திரைகதை எழுத, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

Surya 42 Goa schedule shooting wrapped directed by Siruthai Siva

முன்னதக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் 09.09.2022 அன்று காலை 10 மணிக்கு வெளியானது. இந்த மோஷன் போஸ்டரில் வானத்தில் கழுகு பறந்து வருவதைப் போலவும் பூமியில் இடிபாடுகளில் இருள் சூழ்ந்த நிலையில் இருப்பது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன. பறந்து வந்த கழுகு சூர்யாவின் தோளில் அமர்வது போல காட்சிகள் இருந்தன.

இதனை தொடர்ந்து கோவாவில் 250 பவுன்சர்களுடன் சூர்யா சண்டையிடும் அதிரடி சண்டைக்காட்சி படமாக்கப்படும் என்றும், படத்தின் மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்ட அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் ஆகிய 5 கதாபாத்திரத்திலும் நடிகர் சூர்யாவே நடிக்கிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.

Surya 42 Goa schedule shooting wrapped directed by Siruthai Siva

இந்நிலையில், கோவாவில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அங்கு நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள், வேறு லொகேஷன்களில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

Also Read | PS1 : "த்ரிஷா மாதிரி இருக்கா.. குந்தவை இவதான்!".. 10 வருடம் முன்பே ராஜேஷ் குமார் கதையில் சுவாரஸ்யம்.!

தொடர்புடைய இணைப்புகள்

Surya 42 Goa schedule shooting wrapped directed by Siruthai Siva

People looking for online information on Siruthai Siva, Suriya, Suriya 42, Suriya42 will find this news story useful.