www.garudabazaar.com

Video : சேர்ந்து வீடியோவில் தோன்றி, தீபாவளி வாழ்த்து சொன்ன சூர்யா ஜோதிகா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பல வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் திரைப்படங்கள் நடிப்பது, 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் திரைப்படங்களை தயாரிப்பது உள்ளிட்ட பணிகளையும், சமூக நோக்கிலான பல அற பணிகளையும் இவர்கள் செய்து வருகின்றனர்.

Suriya Jyothika viral diwali wishes சூர்யா ஜோதிகா

பல முன்னணியை இயக்குநர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா தற்போது முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாலா இயக்கத்தில் வணங்கான், சிறுத்தை சிவா இயக்கத்திலான அடுத்த படம் என சூர்யா பல படங்களில் நடித்துவருகிறார்.

Suriya Jyothika viral diwali wishes சூர்யா ஜோதிகா

இதேபோல் நடிகை ஜோதிகா,  முதன்மை பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். அண்மையில் புது டெல்லியில் நடைபெற்ற 68 வது தேசிய விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று படத்திற்காக 2டி நிறுவனம் சார்பில் நடிகை ஜோதிகா, தேசிய விருதை குடியரசு தலைவர் கையில் இருந்து பெற்றார்.  இதே விழாவில் ஜோதிகாவுடன் கலந்துகொண்ட நடிகர் சூர்யாவுக்கு, சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வீடியோவில் தோன்றி, “இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. பாதுகாப்பாக இருங்கள்” என்று தீபாவளி திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்து விழிப்புணர்வும் ஊட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து இருவருக்கும் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Jyothika viral diwali wishes சூர்யா ஜோதிகா

People looking for online information on Jyothika, Suriya will find this news story useful.