www.garudabazaar.com

கதை ரெடியா? கார்த்தி இயக்கத்தில் சூர்யா? சுவாரஸ்யமான பதிலளித்த கார்த்தி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி, தனது இயக்குனர் அவதாரம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

Sardar Karthi Talks about Film with Suriya as director

Also Read | மன்சூர் அலிகானின் மாஸ் டான்ஸ்.. வெளியான 'பகாசூரன்' படத்தின் 2-வது சிங்கிள் 'காத்தம்மா' பாடல்!

நடிகர் கார்த்தியின் 22வது படமான சர்தார்  வருகிற தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Sardar Karthi Talks about Film with Suriya as director

ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்ற, பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி கேரளாவில் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் நடிகர் கார்த்தி, ராஷி கண்ணா, ராஜிஷா விஜயன் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய காரத்தியிடம்  படம் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டன.

Sardar Karthi Talks about Film with Suriya as director

நடிகர் கார்த்தி இயக்குனர் கார்த்தியாக படம் இயக்குவது குறித்த கேள்விக்கு நடிகர் கார்த்தி, "அப்படி ஒருத்தர் இருக்காரா? கதை எழுத ஒரு ஐடியா மட்டும் கிடைச்சுருக்கு. நான் உதவி இயக்குனராக இருக்கும் போது அண்ணன் சூர்யாவை வைத்து தான் கதை எழுதி இருக்கேன். அண்ணன்னா கைய பிடிச்சு இழுத்துட்டு போய் கூட நடிக்க வைக்கலாம். அண்ணன் சூர்யாவை வைத்து படம் இயக்கனும்னு ரொம்ப ஆசை. அவரால் எப்படிப்பட்ட கேரக்டராகவும் மாற முடியும். அவருடன் பணிபுரிவது எளிதாக இருக்கும்" என கார்த்தி பதில் கூறியுள்ளார்.

Sardar Karthi Talks about Film with Suriya as director

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து படத்தில் நடிகர் கார்த்தி, இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.‌ நடிகர் சூர்யா ஆயுத எழுத்து படத்தில் மைக்கேல் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | கைதி-2 எப்போ? "பெருசா பண்ணனும்".. கார்த்தி கொடுத்த சூப்பர் அப்டேட்!

கதை ரெடியா? கார்த்தி இயக்கத்தில் சூர்யா? சுவாரஸ்யமான பதிலளித்த கார்த்தி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sardar Karthi Talks about Film with Suriya as director

People looking for online information on Karthi, Sardar Karthi, Sardar Press Meet, Suriya will find this news story useful.