Kaateri logo top
www.garudabazaar.com

"Suriya -க்கு நிறைய Troubles.. தூக்கி எறிஞ்சான் ஜெய்பீம்-னு" - பாரதிராஜா Emotional Speech

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோதிகா & சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.

suriya faced troubles and gave jai bhim says bharathiraja

இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைகிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார். இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

Also Read | "சூர்யா National Award வாங்கிட்டான்.. அடுத்து கார்த்தி" - வாழ்த்திய பாரதிராஜா

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாநகரில் நடந்தது, படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இவ்விழாவில் நடிகர் சூர்யா குறித்து பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா,  “சூர்யா வொண்டர்ஃபுல் ஆர்டிஸ்ட்.. அவனுக்கு இந்த இண்டஸ்ட்ரியில நிறைய ட்ரபுள் கொடுத்தாங்க.. தூக்கி எறிந்தான் ஜெய்பீம் என.. நான் சொன்னேன், உனக்கு எதுவந்தாலும் பின்னாடி நான் நிப்பேண்டான்னு.

அவன் நமன் சொத்து. மக்கள் பார்வையில் அவர்கள் நடிகர்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு தன்மை இருக்கிறது. சூர்யா சம்பாதிச்சு ஒன்னும் வெச்சுக்கல. அறக்கட்டளை ஆரம்பித்து பிள்ளைகளுக்கு கல்வி கொடுத்தான். அவன் பண்ணாத நன்கொடை கிடையாது. எல்லாருக்கும் தான் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் கொடுக்கும் மனப்பான்மை மனிதனுக்கு வரவேண்டும். நல்ல இதயம் கொண்டவன் சூர்யா.. இல்லையென்றால் இப்படி வரமுடியாது. கார்த்தியும் அப்படித்தான்.

இவர்கள் குடும்பம், குழந்தைகள், நல்ல ஃபேமிலி..  சிவகுமார் நல்லொழுக்கமாக வளர்த்துள்ளார். தொழிலுடன் நிற்காமல் வாழ்க்கைத்தரத்திலும் நல்லபடியாக இருக்கிறார்கள். அனைவருக்கும் ஹேட்ஸ் ஆஃப் தெம்.!” என்று எமோஷனலாக பேசினார்.

Also Read | "சூர்யாவோட அந்த சீன் நான் நடிக்கும்போது" - பாரதிராஜா நினைவுபடுத்தியதும் சிரித்த சூர்யா.!

தொடர்புடைய இணைப்புகள்

suriya faced troubles and gave jai bhim says bharathiraja

People looking for online information on 2D Entertainment, Aditi Shankar, Bharathiraja, Karthi, Suriya, Viruman, Viruman Audio Launch, Yuvan Shankar Raja will find this news story useful.