Kaateri logo top
www.garudabazaar.com

9 வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் பிரபல 80ஸ் நடிகை.. அதுவும் சிவகார்த்திகேயன் கூடவா? சூப்பரு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் பிரபல 80ஸ் நடிகை  இணைந்துள்ளார்.

Saritha Doing a Role in SivaKarthikeyan Maaveeran Mahaveerudu

Also Read | சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் ஜோடியான அதிதி ஷங்கர்..! வெளியான சூப்பர் அறிவிப்பு

பிரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக மாவீரன் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைய உள்ளார். இவர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு மாவீரன் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில்  பிரபல நடிகை சரிதா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Saritha Doing a Role in SivaKarthikeyan Maaveeran Mahaveerudu

ஆந்திராவை சார்ந்த நடிகை சரிதா 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நக்மா, விஜய சாந்தி, தபு, சுஷ்மிதா சென் ஆகிய நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்தவர்.

இயக்குனர்கள் பாலச்சந்தர், பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்களுடனும் நடித்தவர்.

Saritha Doing a Role in SivaKarthikeyan Maaveeran Mahaveerudu

கடைசியாக சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்து தமிழகத்தில் சர்ச்சையான சிலோன் படத்தில் நடித்து இருந்தார். தற்போது 9 வருடங்களுக்கு பிறகு நடிக்க வந்துள்ளார்.

இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள். இந்த படத்தின் எடிட்டராக பிலோமின் ராஜ் பணிபுரிகிறார்.

Saritha Doing a Role in SivaKarthikeyan Maaveeran Mahaveerudu

இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

 

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்.. வில்லனாக மிஷ்கின்! வெளிவந்த கொலமாஸ் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Saritha Doing a Role in SivaKarthikeyan Maaveeran Mahaveerudu

People looking for online information on Saritha, Saritha in Maaveeran Movie, Sivakarthikeyan, SivaKarthikeyan Maaveeran Movie will find this news story useful.