BGM Awards 2022 : பாலா கிட்ட 'Sunny' கேட்ட விஷயம்.. "இதுக்கு No-ன்னு எப்படி அவரு சொல்லுவாரு?".. அசத்தல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி, மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

Sunny leone fun video in Behindwoods gold medals 2022

இந்த இரண்டு நாட்களிலும், Behindwoods விருது நிகழ்ச்சியில், வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, VVS லக்ஷ்மண், எஸ் ஜே சூர்யா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், நெல்சன், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஜோனிதா காந்தி, , சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன், அற்புதம் அம்மாள், சீமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Behindwoods கோல்டு மெடல்ஸ் விருது நிகழ்ச்சி தொடர்பாக, தற்போது "Behindwoods TV" யூ டியூப் சேனலில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை, லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், அனிருத், பிரியங்கா மோகன், கீர்த்தி ஷெட்டி, சன்னி லியோன், அற்புதம் அம்மாள், ஜோனிதா காந்தி உள்ளிட்டோர் விருது வென்றிருந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தது.

"Dippam Dappam" டான்ஸ்

இதனைத் தொடர்ந்து, தற்போது பிரபல நடிகை சன்னி லியோன், Behindwoods விருது மேடையில் கலந்து கொண்ட போது, பேசி இருந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், KPY பாலா, சன்னி லியோனிடம் சென்னையில் பிடித்த இடம் பற்றி கேட்க, அதற்கு சன்னியோ, சென்னையை மிகவும் பிடிக்கும் என்றும், ஆனால் அதிக இடங்கள் சென்றதில்லை என்றும், ஷூட்டிங் பெயரில் மட்டுமே சென்னைக்கு அதிகம் வந்துள்ளதாகவும் கூறுகிறார்.

Sunny leone fun video in Behindwoods gold medals 2022

இதனால், பாலாவிடம் சென்னையை சுற்றிக் காட்ட அழைத்து செல்ல வேண்டும் என சன்னி கூற, வானத்தில் பறக்கவே தொடங்கி விட்டார் பாலா. இதன் பின்னர், "Dippam Dappam" பாடலுக்கு சன்னி லியோன் மற்றும் பாலா ஆகியோர் இணைந்து நடனமாடவும் செய்திருந்தனர். அதே போல, பாலா பாட அதற்கு Lip Sync-ம் செய்திருந்தார் சன்னி லியோன்.

Sunny leone fun video in Behindwoods gold medals 2022

முழுக்க முழுக்க சன்னி லியோனின் நடனம், Fun என களை கட்டிய இந்த வீடியோ, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

BGM AWARDS 2022 : பாலா கிட்ட 'SUNNY' கேட்ட விஷயம்.. "இதுக்கு NO-ன்னு எப்படி அவரு சொல்லுவாரு?".. அசத்தல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sunny leone fun video in Behindwoods gold medals 2022

People looking for online information on Behindwoods Gold Medals 2022, BGM 8, KPY Bala, Sunny Leone will find this news story useful.