Maha others
Nadhi others
www.garudabazaar.com

"உதவி செய்வார்னு சொல்லுவாங்க.. ஆனா" - உதயநிதிக்கு இப்படி ஒரு மனசா.? ரிவீல் பண்ணிய சிம்பு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் உதயநிதியின் மனைவியும் பிரபல இயக்குநருமானவர் கிருத்திகா உதயநிதி.

Silambarasan TR reveals udhayanithi helping mind video

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த், சந்தானம் ஆகியோர் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

அதன் பின்னர் விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படத்தை கிருத்திகா உதயநிதி,  இயக்கினார். இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஃபாத்திமா விஜய் ஆண்டனி காளி திரைப்படத்தை  தயாரிக்க, விஜய் ஆண்டனியே இசை அமைத்திருந்தார்.

Silambarasan TR reveals udhayanithi helping mind video

இந்நிலையில்தான் கிருத்திகா உதயநிதி, தற்போது பேப்பர் ராக்கெட் என்கிற வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டலிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன், பூர்ணிமா பாக்கியராஜ், சின்னி ஜெயந்தி, கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சிம்பு, “இந்த மேடையில் நான் முதலில் ஒரு நன்றி கூற வேண்டும். அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது அனைவருக்குமே தெரியும். அந்த நேரத்தில் உடன் நின்று உதவி செய்த நம்முடைய மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அங்கிள்க்கும் மற்றும் உதய் அண்ணா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‌‌

ஒருமுறை ஆர்.ஜே.பாலாஜி குறிப்பிட்டிருந்தார். யார் என்ன உதவி கேட்டாலும் உதயநிதி அவர்கள் செய்வதாக சொல்லி இருந்தார். உண்மையில் அவர் அப்படித்தான், அத்துடன் அந்த உதவியை செய்த பின்னர் விட்டுவிடாமல் கடைசிவரை என்ன நடக்கிறது என்று கேட்டறிந்து அது தொடர்பான விஷயங்களை பின் தொடர்ந்து செயலாற்றுவார், மிகவும் நன்றி அண்ணா. ” என்று தெரிவித்தார்.

"உதவி செய்வார்னு சொல்லுவாங்க.. ஆனா" - உதயநிதிக்கு இப்படி ஒரு மனசா.? ரிவீல் பண்ணிய சிம்பு. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR reveals udhayanithi helping mind video

People looking for online information on Kiruthiga Udhayanidhi, Silambarasan TR, Udhayanidhi Stalin will find this news story useful.