Rocketry

சிம்பு - கௌதம் கார்த்திக் இணையும் 'பத்து தல' படத்தின் ரிலீஸ் எப்போ? வெளியான சூப்பர் தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

Silambarasan TR Pathu Thala Movie Release Date Announced

2017 ஆம் ஆண்டு நியோ நோயர் வகைமையில் உருவான இந்த படம் கன்னட சினிமாவில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றது. நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் இது தான்.

ஸ்டூடியோ கிரீன் K. E ஞானவேல் ராஜா தயாரிப்பில், சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார். கொரோனா காரணமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், 26.08.2021 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

Silambarasan TR Pathu Thala Movie Release Date Announced

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் துவங்கியது. மூன்றாம் கட்ட் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது. இப்படத்தின் முன்னோட்டம் சிம்பு பிறந்தநாளுக்கு வெளியானது. இந்நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 14 அன்று ரிலீசாக உள்ளது என் புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Pathu Thala Movie Release Date Announced

People looking for online information on A R Rahman, Gautham Karthik, Pathu Thala, Silambarasan TR, Str will find this news story useful.