www.garudabazaar.com

செம..ஷங்கர் & ராம் சரண் இணையும் RC15.. படக்குழுவில் இணைந்த பிரபல தமிழ் டெக்னீசியன்! இவர் தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் - ராம் சரண் இணையும் RC15 படத்தில் பிரபல தமிழ் சினிமா நடன இயக்குனர் இணைந்துள்ளார்.

Shankar Ram Charan RC15 Sandy Master Choreography for a song

Also Read | திருமணத்திற்கு பிறகு ப்ரியா மணி Re Entry கொடுக்கும் தமிழ் படம்..? ரிலீஸ் எப்போ? சூப்பர் அப்டேட்..!

RC15 படத்தின் துவக்க விழா கடந்தாண்டு செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது.

இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

Shankar Ram Charan RC15 Sandy Master Choreography for a song

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Shankar Ram Charan RC15 Sandy Master Choreography for a song

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.  #RC15 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு   ஐத்ராபாத் & விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சில நாட்களுக்கு முன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Shankar Ram Charan RC15 Sandy Master Choreography for a song

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். ஐத்ராபாத்தில் நடந்த சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ப்ரின்ஸ்' படத்தின் முன் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய போது இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக சாண்டி மாஸ்டர் அறிவிக்கப்பட்டுள்ளார். RC15 படத்தின் ஒரு பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த பிரபல விளையாட்டு வீராங்கனை.. வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Shankar Ram Charan RC15 Sandy Master Choreography for a song

People looking for online information on Choreography Sandy Master, Ram Charan, RC15, Sandy Master, Shankar will find this news story useful.