''இந்தியாவிலேயே பெஸ்ட் படம்... இது மிக அருமையான நடிகர் விஜயகாந்த்'' - பிரபல நடிகர் புகழாராம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில் வெளியான 'தீனா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதனைத் தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த்துடன் 'ரமணா', சூர்யாவுடன் 'கஜினி', 'ஏழாம் அறிவு', தளபதி விஜய்யுடன் 'துப்பாக்கி', 'கத்தி', 'சர்கார்' சூப்பர் ஸ்டாருடன் 'தர்பார்' என தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

Sathish comments on AR Murugadoss and Vijayakanth's classic film Ramana | ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜயகாந்த்தின் படம் குறித்து நடிகர் சதீஷ

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளிலும் அவர் முன்னணி இயக்குநராக விளங்குகிறார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 13) இவர் இயக்கத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்த 'ரமணா' திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பானது. இந்த படம் குறித்து சமூக வலைதளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் சிறந்த படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். விஜயகாந்த் சார் மிக அருமையான நடிகர். நீங்கள் சிறந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் என்றார்.

Entertainment sub editor