Thalapathy 65 Breaking : முதன் முறையாக இளம் Music director-உடன் இணையும் தளபதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' படத்துக்கு பிறகு தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

'தளபதி 65' என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தில் இருந்து முக்கிய தகவல் ஒன்று எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தான் அந்த தகவல். அது வேறு யாரும் இல்லை பிரபல இசையமைப்பாளர் தமன் தான் அது.

இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் அல்லு அர்ஜூனின் அல வைக்குந்தபுரம்லோ பட பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற புட்டபும்மா என்ற பாடல் யூடியூபில் அதிரி புதிரி ஹிட். இதனையடுத்து தளபதி விஜய்யுடன் தமன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இப்பொழுது எகிறத் தொடங்கியுள்ளது.

Entertainment sub editor