Youtube-ல் 1 பில்லியன் வியூஸ்.... நடிகர் விஜய்யின் 'தளபதி 65'க்கா ரசிகர்கள் மரண வெய்ட்டிங் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான 'அல வைக்குந்தபுரம்லோ' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் அதிரி புதிரி ஹிட். குறிப்பாக புட்ட பொம்மா பாடல் யூடியூபில் சக்கபோடு  போட்டு வருகிறது.

Thalapathy Vijay fans shares expectation Thaman, AR Murugadoss's Thalapathy 65 album | தமன் இசையமைப்பில் தளபதி விஜய், ஏ.ஆர்.முருகதாஸின் தளபதி 65 பாடல

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவிட்டிருந்தார். 'அல வைக்குந்தபுரம்லோ' பாடல்களான சமஜவரகமன, ராமுலோ ராமுலா, புட்ட பொம்மா உள்ளிட்ட பாடல் வீடியோ, லிரிக்கல் வீடியோ உள்ளிட்டவைகள் சேர்த்து யூடியூபில் 1 பில்லியன் வியூஸை நெருங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த ரசிகர்கள் 'தளபதி 65' பாடல்களுக்கு மரண வெய்ட்டிங் என்று தெரிவித்தனர்.

'மாஸ்டர்' படத்துக்கு பிறகு தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 65' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார். 'அல வைக்குந்தபுரம்லோ' பட பாடல்கள் சூப்பர் ஹிட்டானதால் தளபதி 65 பட பாடல்களுக்கு இப்பொழுதே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Entertainment sub editor