ராஜமௌலியின் RRR.. 50வது நாளிலும் படைத்த மெகா சாதனை! இது நம்ம லிஸ்ட்லயே இல்லை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர் ஆர் ஆர் திரைப்படம் பல மொழிகளில் கடந்த மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

RRR Movie running successfully in more than 500 theatres

Also Read | H. வினோத் இயக்க அஜித் நடிக்கும் AK61 படத்தில் இந்த KGF நடிகர் இருக்காரா? முழு தகவல்

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவானது. படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

RRR Movie running successfully in more than 500 theatres

ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு.

RRR Movie running successfully in more than 500 theatres

RRR படம் முதல் நாளில் 223 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலாக ஈட்டியுள்ளது. இது பாகுபலி படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் ஆகும். அதேபோல் முதல் மூன்று நாளில் 500 கோடி ரூபாயை மொத்த வசூலாக ஈட்டியது. ஒரு வாரத்தில் இந்த படம் 710 கோடி ரூபாயை மொத்த வசூலாக உலகம் முழுவதும் வசூலித்தது. 4 வாரங்களில் RRR படம் 1100 கோடி ரூபாயை மொத்த வசூலாக ஈட்டியுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும்.

RRR Movie running successfully in more than 500 theatres

இந்நிலையில் RRR படம், தற்போது 50-வது நாளை கடந்துள்ளது. 50வது நாளிலும் 500+ திரையரங்குகளில் RRR படம் ஓடுவதாக படத்தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

RRR Movie running successfully in more than 500 theatres

People looking for online information on Alia Bhatt, Jr ntr, Ramcharan, RRR Movie, RRR Movie running successfully, SS Rajamouli will find this news story useful.