ஒய்.ஜி.மகேந்திரன் தாயாரின் உடலுக்கு ரஜினி, கமல், அனிருத் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 07, 2019 11:04 AM
நாடகம் மற்றும் திரைப்பட நடிகராக தமிழ் திரையுலகில் பரவலாக அறியப்படுபவர் ஒய்ஜி மகேந்திரன். இவரது தயார் ராஜலட்சுமி உடல் நடலக் குறைவு காரணமாக நேற்று ( ஆகஸ்ட் 6 ) மரணமடைந்தார்.

93 வயதாகும் ராஜலட்சுமி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இவரது உடல் தற்போது டி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். அவரது உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இசைஞானி, இளையராஜா, அனிருத், விவேக், ஐஸ்வர்யா R.தனுஷ், சரத்குமார், ராதிகா, குஷ்பு உள்ளிட்ட திரையுலகினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஒய்.ஜி.மகேந்திரன் தாயாரின் உடலுக்கு ரஜினி, கமல், அனிருத் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி வீடியோ