''இந்தியன் 2'வில் நடிக்க வாய்ப்பு தருவீர்கள் என காத்திருக்கிறேன்'' - பிரபல நடிகர் கோரிக்கை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Subbu Panchu Speaks about Kamal Haasan and Shankar's Indian 2

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கும் என்று எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

இந்நிலையில் பிரபல நடிகர் சுப்பு பஞ்சு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். அதில், வணக்கம் சார், நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன். நீங்கள் என்னை இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு தருவீர்கள் என்றால் அது எனக்கு மிகுந்த சந்தோஷம்.  முழுமையான நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். என்று தெரிவித்திருக்கிறார்.