கொரோனா : படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ. சொகுசு ஹோட்டலை திறந்துக் கொடுத்த சிம்பு வில்லன்..!
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் அடைந்து உள்ளனர். வேலை செய்பவர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். இந்த நிலையில் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் மிகுந்த இந்த கடினமான சூழல் உருவாகியிருக்கிறது.
இந்த நேரத்தில் பல நடிகர்களும் தங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்தவகையில் அருந்ததி, சந்திரமுகி, ஒஸ்தி போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் சோனு சுத். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பல விருதுகளை பெற்றுள்ளார்,
சமீபத்தில் டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். இந்த துயர சம்பவத்தை அடுத்து சோனு சுத் தனது நட்சத்திர ஓட்டலை கொரோனாவுக்காக திறந்து விட்டுள்ளார். மருத்துவர்கள் செவிலியர்கள் நேரம் காலம் பார்க்காமல் கொரோனாவுக்கு எதிராக உழைத்து வருகின்றார். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று அவர் இந்த உதவி செய்துள்ளார். மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஜூவு பகுதியில் இருக்கும் அவரது நட்சத்திர ஹோட்டலை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மிகவும் பாராட்டபட வேண்டிய விஷயம்.