கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக மாநாடு நடிகர் முக்கிய முடிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது நிகழும் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் திரைப்படங்களின் படப்பிடிப்பு , ரிலீஸ் என அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன.

STR's Maanaadu actor Udhaya reduces his salary by 40 % due to Coronavirus Lockdown | தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட எஸ்டிஆரின் மாநாடு நடிகர்

இதனையடுத்து திரைப்படம் சார்ந்த தொழில்கள் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. தினசரி ஊதியம் பெறும் ஊழியர்கள் முதல் நடிகர்கள் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் பெருமளவில் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு நடிகர் விஜய் ஆண்டனி தான் நடித்து வரும் படங்களில் பெறும் சம்பளத்தில் 25 சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் இயக்குநர் ஹரியும் தனது சம்பளத்தைக் குறைத்துக்கொள்வதாக அறிவித்தனர். இதன் ஒரு பகுதியாக நடிகர் உதயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரானா  வைரஸின் தாக்கத்திலிருந்து நிச்சயம் மீண்டும் வருவோம்.மற்ற அனைத்து துறைகளை விட நம் திரையுலகம் இந்த Corona வைரஸால்  அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது .

நம் முதலாளிகள் அனைவரும் நன்றாக இருந்தால்தான் இந்த ஒட்டுமொத்த திரையுலகமும் நன்றாக இருக்கும்.நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "அக்னி நட்சத்திரம்"திரைப்படத்தில் தயாரிப்பாளரின் நலன் கருதி மிகக்குறைந்த  சம்பளத்திற்கு  ஒத்துக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறேன்.

தற்போது இந்த கொரானாவின் தாக்கத்தால்... ஒட்டுமொத்த திரையுலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ... நான் மீண்டும் தயாரிப்பாளருக்கு உதவிடும் வகையில் நான் ஒத்துக் கொண்ட சம்பளத்திலிருந்து மீண்டும் தற்போது 40% சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன்.

அதேபோல் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் "மாநாடு"படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த படத்திலும் எனக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திலிருந்து 40% சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதிக்கிறேன். 

இதற்கு முன்னோடியாக இருந்த நடிகர் விஜய் ஆண்டனி , ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி போன்றோர் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்க அதே போல் நானும் எனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதில் பெருமைகொள்கிறன். நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor