'போலீஸ் என்ன தூக்கி உள்ள வைக்கவிட்றாதீங்க'' - நடிகர் சூரி எதுக்கு அப்படி சொல்றார்?!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு வரும் தகவல்கள் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மருத்துவர்களும் காவல்துறையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூரி இன்று (மே 12) கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல்துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய காவல்துறையினருக்கு கோடி கோடி நன்றிகள். எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லை சாமி, அது போல் தற்போது காவல் துறையினர் நாம் எல்லோருக்கும் எல்லை சாமி போல் இருந்து நம்மைக் காத்து வருகின்றனர்.
கடவுளை அன்றாடம் வணங்கும் நாம் அனைவரும், சமீப காலங்களாக காவல் துறையினையறையும் வணங்க ஆரம்பித்து விட்டோம். எனவே நிஜ கதாநாயகர்களான இவர்களைச் சந்தித்து நன்றி கூறி, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த நாள் என் வாழ் நாளில் மிக முக்கியமான நாளாக நினைக்கிறேன் '' என்று தெரிவித்தார்.
அப்போது தமிழக டாஸ்மாக் மதுபானக்கடைகள் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, ''நான் என்ன வார்த்தை சொன்னா தூக்கி போட்டு மிதிப்பாங்க. என்ன வார்த்தை சொன்னா பக்குவமா வீடு போய் சேரமுடியும்னு எனக்கு தெரியும். உங்கள் கேள்விக்கு பெரிய பெரிய ஆட்கள் பதில் சொல்லிடுவாங்க. என்னால சொல்ல முடியுமா ?
காவல்துறையினரை வாழ்த்த வந்திருக்கேன். அவங்க கையால என்ன உள்ள தூக்கி வைக்க விட்றாதீங்க. போனவன் என்னடா இன்னும் வரலனு போன் பண்ணி கதறுவதற்கா ? பத்திரிக்கைகாரங்க கேள்வி மேல் கேள்வி கேட்டு என்ன தூக்கி உள்ள வச்சுட்டாங்கனு சொல்லுவேன். உடனே அட சண்டாளா அட அதுக்கு தான் இங்க இருந்து அங்க போனனு கேக்குறதுக்கா? என்று காமெடியாக பதிலளித்தார்.
'போலீஸ் என்ன தூக்கி உள்ள வைக்கவிட்றாதீங்க'' - நடிகர் சூரி எதுக்கு அப்படி சொல்றார்?! வீடியோ