"இவங்க தான் இரண்டாம் இடத்துக்கு தகுதியானவங்க, ஆனா"... விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், அனிதா, சனம், வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

popular vijay tv celebrity on biggboss4tamil விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு வைரல்

இந்நிலையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "என் பார்வையில், இரண்டாவது இடத்திற்கு சனம், அல்லது அனிதா மட்டுமே தகுதியானவர்கள். இந்த விளையாட்டை விதிமுறைகளுக்கு உட்பட்டு நேர்மையாக விளையாடியவர்கள்.

முகத்துக்கு நேரே கேட்டார்கள். புறம்பேசவில்லை. அணி சேர்த்துக்கொண்டு பிறரைப் பழிவாங்கவில்லை. பித்தலாட்டம் செய்யவில்லை. கோழைகளாக இல்லை. விதிமுறைகளை மீறவில்லை. அனிதாவின் அழுகையும், சிரிப்பும் வெறுப்பாக இருந்தது என்பது விளையாட்டுக்கு முரண் இல்லையே. ஒருவர் தன்னை அழகாக காட்டிக்கொள்ள நடிக்க, அதுவும் ஒரு பெண்ணுக்கு, எவ்வளவு நேரம் ஆகும்? நயன்தாராவைப் போல மென்மையாக சிரித்து, ஸ்டைலாக அழுது நடித்திருக்கலாமே! இயல்பாகத்தானே இருந்தார்?

popular vijay tv celebrity on biggboss4tamil விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு வைரல்

சனம், தன்னை உள்ளடக்கிய பிரச்சனைகளில் தீர விசாரிக்கிறதைத் தவிர வேறு என்ன செய்தார்? தேவையில்லாத பாச அணிகளை உருவாக்கவோ, அதில் சிக்கிக்கொள்ளாமலோ எல்லோருடனும் இனிமையாக, யதார்த்தமாகத்தானே பழகினார். இந்த இருவரும் எந்த விதிமுறைகளை எத்தனை முறை மீறினார்கள்? இந்த விளையாட்டில் முன்னணியில் நின்று (எதுவுமே பங்களிக்காத சில மக்குணிகளைப் போல இல்லாமல்) விளையாடியவர்கள் இந்த இருவர் மட்டுமே!" என்று கூறியுள்ளார்.

popular vijay tv celebrity on biggboss4tamil விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு வைரல்

People looking for online information on Anitha, Biggboss4tamil will find this news story useful.