www.garudabazaar.com

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்... செம வைரல் இப்போ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் "டான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இத்திரைபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, இதன் அதிகாரபூர்வ வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது லைகா நிறுவனம்.

popular biggboss actor joins sivakarthikeyan film சிவகார்த்திகேயன் படத்தில் பிக்பாஸ் பிரபலம்

இந்நிலையில் அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த  ஹீரோயின் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க தற்போது சூரி, குக் வித் கோமாளி ஷிவாங்கி என நாளுக்கு நாள்  பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் இரண்டாம் சீசனில் பங்கேற்ற ஷாரிக் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமாவின் மகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் டான் பட ஷூட்டிங்கிற்கு விமானத்தில் செல்லும் போது ஷிவாங்கி மற்றும் ஷாரிக் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. உமா ரியாஸ் கானும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதலாம் சீசனில் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @umariyazkhan

popular biggboss actor joins sivakarthikeyan film சிவகார்த்திகேயன் படத்தில் பிக்பாஸ் பிரபலம்

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.