www.garudabazaar.com

'மெகா' ஹீரோவுடன் இணையும் 'பிரம்மாண்ட' இயக்குநர் ஷங்கர் .. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியத் திரையுலகில்  'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' ஆகிய பிரம்மாண்டமான படங்களை இயக்கி தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர்.

ஷங்கர் ராம் சரண் பிரம்மாண்ட படம் Shankar teams up Ram Charan

இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தில் தெலுங்கு நடிகர் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வசூல் ரீதியான பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இப்படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார்.

தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த மெகா கூட்டணி இணையும் படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. இதுகுறித்து தில் ராஜூ, “ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர் மற்றும் வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது . இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநர் ஷங்கர் மற்றும் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியா முழுவதுமான ரசிகர்களுக்கும் இந்த படத்தை ஒரு பொழுதுபோக்குப் படமாக நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் இப்படம் ராம் சரணின் 15வது திரைப்படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தில் ராஜுவோடு சேர்ந்து ஷிரிஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் தலைப்பு உள்ளிட்ட ஏனைய விபரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது. இந்த அறிவிப்பை இயக்குநர் ஷங்கரும் தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ராம் சரண் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பு முடிந்ததும் அவர் ஷங்கர் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ஷங்கர் ராம் சரண் பிரம்மாண்ட படம் Shankar teams up Ram Charan

People looking for online information on திரைப்படம், பிரம்மாண்டம், ராம் சரண், ஷங்கர், Ram Charan, Shankar will find this news story useful.